ஒரு ரூபாய் அனுப்புங்க... ஓட்டை சரிபார்க்கணும்! சுயேச்சை அட்டகாசம்!!

Mumbai North West independent candidate runs unique campaign

அரசியல் கட்சிகளின் கடும் போட்டிகளுக்கு இடையே சில சுயேச்சை வேட்பாளர்களின் அட்டகாசங்களும் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தும். மும்பையில் ஒரு சுயேச்சை வேட்பாளர் தனக்கு ஆன்லைனில் ஒரு ரூபாய் அனுப்புமாறு கேட்டிருக்கிறார். எதற்காக தெரியுமா?

மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் நான்காம் கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் முடிந்து விடுகிறது. இந்நிலையில், மும்பை வடமேற்கு தொகுதியில் அப்தாப்கான் என்ற சுயேச்சை வேட்பாளர் போட்டியிடுகிறார். அவர் வேட்புமனு தாக்கல் செய்த பின்பு, வீடு, வீடாகச் சென்று ஓட்டு கேட்கவில்லை.

அதற்குப் பதிலாக, வாட்ஸ் அப்பில் பல குழுக்களை ஏற்படுத்தி, அதில் தேர்தல் அறிக்கையை அனுப்பினார். அதிலேயே தினமும் பிரச்சார வாசகங்களை அனுப்பினார். கடைசியாக எல்லோருக்கும் ஒரு மெசேஜ் போட்டார். ‘அன்பு வாக்காளர்களே! இந்த தேர்தலில் வாக்கு எந்திரத்துடன் ஒப்புகைச்சீட்டு எந்திரமும்(விவிபாட்) பயன்படுத்துகிறார்கள். ஆனால், எல்லா இடத்திலும் அந்த எந்திரத்தில் கோளாறு ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன.

எனவே, எனக்கு விழும் ஓட்டுக்களை கூட அவர்கள் மாற்றிவிடலாம். உண்மையில் எனக்கு எத்தனை ஓட்டுகள் விழுந்தது என்பதை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதனால், எனக்கு ஆதரவு தரும் வாக்காளர்கள் ஆளுக்கு ஒரு ரூபாயை ஆன்லைனில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம், எத்தனை ஓட்டுகள் எனக்கு விழுந்திருக்கும் என்பதை சரிபார்த்து கொள்வேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைப் பார்த்த அவரது நண்பர்கள் அவருக்கு பணம் அனுப்பினார்களோ, இல்லையோ அந்த காமெடியை ரசித்தார்கள்.

தமிழக வேட்பாளர்களே! கேரளாவைப் பாருங்க..!

You'r reading ஒரு ரூபாய் அனுப்புங்க... ஓட்டை சரிபார்க்கணும்! சுயேச்சை அட்டகாசம்!! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்டு சஸ்பென்ட் ஆன ஐஏஎஸ் அதிகாரி - மீண்டும் பணியில் சேர்ப்பு; மூக்குடைபட்ட தேர்தல் ஆணையம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்