வாரணாசிக்கு படையெடுத்த தெலுங்கானா விவசாயிகள் - பிரதமர் மோடியை எதிர்த்து 50 பேர் போட்டி

50 Telangana turmeric farmers contesting against pm modi

மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக தெலுங்கானாவைச் சேர்ந்த மஞ்சள் விவசாயிகள் 50 பேர் போட்டியிடுகின்றனர்.

தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் கடந்த 11ந் தேதி தேர்தல் நடந்தது. அங்கு அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா போட்டியிட்டார். கவிதாவை எதிர்த்து மொத்தம் 185 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 175 பேர் அப்பகுதி விவசாயிகள் ஆவர். மஞ்சள் உற்பத்தி செய்யும் இவர்கள், மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரி வருகிறனர். இவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் இங்கு போட்டியிட்டனர். இதனால் நிஜாமாபாத் தொகுதியில் தேர்தல் நடத்த கூடுதல் செலவாைனதுடன் விசேச மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தையும் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்வது என நிஜாமாபாத் பகுதி விவசாயிகள் முடிவு செய்து அங்கு படையெடுத்துள்ளனர். நாளை வாரணாசி தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வாரணாசி தொகுதியில் போட்டியிடுவது குறித்து தெலுங்கானா விவசாயிகள் கூறுகையில், நாங்கள் யாருக்கும் போட்டியாக தேர்தல் களத்தில் நிற்கவில்லை. எங்களுடைய பிரச்சினையை நாடு முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். புதிய அரசாவது எங்கள் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வை காணவேண்டும் என்று கூறியுள்ளன்.

ஏற்கனவே தமிழக விவசாயிகள் 111 பேரை வாரணாசியில் நிறுத்தி, பிரதமர் மோடியை எதிர்க்கட் போவதாக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு வீராப் பாக கூறியிருந்தார். பின்னர் டெல்லிக்கு தமிழக அமைச்சர் ஒருவரால் அழைத்துச் செல்லப்பட்ட அய்யாக்கண்ணு, அங்கு பாஜக தலைவர் அமித் ஷாவுடன் சந்திப்பு நடத்தினார். அமித் ஷாவை சந்தித்த அடுத்த நிமிடமே, மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் போட்டியில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டு அய்யாக்கண்ணு பின் வாங்கிய சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதே போன்று தெலுங்கானா விவசாயிகளையும் பாஜக தரப்பில் சமாதானம் செய்யும் முயற்சிகள் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது.

ராகுலை விட இவர்கள் பெட்டர்! சரத்பவார் சர்டிபிகேட்!!

You'r reading வாரணாசிக்கு படையெடுத்த தெலுங்கானா விவசாயிகள் - பிரதமர் மோடியை எதிர்த்து 50 பேர் போட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மல்லுக்கட்டும் திமுக.. அதிமுக.. அமமுக ..! குன்றத்தில் கொடி நாட்டப் போவது யார்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்