திரிணாமுல் எம்எல்ஏக்கள் குறித்த சர்ச்சை ..! மோடிக்கு 72 ஆண்டு தடை...! அகிலேஷ் காட்டம்

Pm modi should be banned for 72 years, akhilesh on Twitter

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 40 பேர் தன்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன்,மோடியின் இது மாதிரியான வெட்கக்கேடான பேச்சுக்கு 72 ஆண்டுகள் தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள ஸ்ரீராம்பூரில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய மோடி, மக்களவைத் தேர்தல் முடியட்டும், மே.வங்கத்தில் தாமரை மலரும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மம்தா குறைவான எம்.பி.க்களுடன் பிரதமர் கனவு காண்கிறார். மம்தாவுக்கு டெல்லி மிக தொலைவில் இருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திரிணாமுல் கட்சியில் பெரும் கலகமே வெடிக்கப் போகிறது என பிரதமர் மோடி மிரட்டல் தொனியில் பேசியிருந்தார்.

பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் காட்டமாக கருத்துத் தெரிவித்துள்ளார். நாட்டில் வளர்ச்சிதான் நாங்கள் கேட்கிறோம். பிரதமரின் வெட்கக்கேடான பேச்சைக் கேட்டீர்களா? 125 கோடி மக்களின் நம்பிக்கையை இழந்தபின், அறத்துக்கு மாறான வகையில், சென்று 40 எம்எல்ஏக்கள் அளித்த உறுதியைப் பெற்றுள்ளார். பிரதமர் மோடியின் கறுப்புப்பண மனநிலையைத் தான் இது பிரதிபலிக்கிறது. பிரதமர் மோடியின் பேச்சுக்கு 72 மணிநேரம் தடை அல்ல 72 ஆண்டுகள் தடை செய்ய வேண்டும் என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இரு மதங்களுக்கு இடையே வெறுப்புணர்வை உண்டாக்கும் வகையில் பேசி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம் அவருக்கு 72 மணிநேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்தது. அதுபோல் அல்லாமல் மோடிக்கு 72 ஆண்டுகள் தடை கோரியுள்ளார் அகிலேஷ் யாதவ்.

இங்கிலாந்து குடியுரிமை வைத்துள்ளீர்களா? ராகுல்காந்திக்கு உள்துறை நோட்டீஸ்!

You'r reading திரிணாமுல் எம்எல்ஏக்கள் குறித்த சர்ச்சை ..! மோடிக்கு 72 ஆண்டு தடை...! அகிலேஷ் காட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காங்கிரசுக்கு ஆதரவு இல்லை! மாயாவதி திடீர் மிரட்டல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்