அதிமுக அரசை கவிழ்க்க திமுக ஒத்துழைக்கணும்...! இல்லைன்னா பயப்படுறீங்கனு அர்த்தம்...! தங்க. தமிழ்ச்செல்வன் தடாலடி

Ammk will join hands with Dmk to dissolve admk govt: thanga thamilselvan:

இடைத்தேர்தல் நடைபெற்ற 18 தொகுதிகள் மற்றும் நடைபெறப்போகும் 4 தொகுதிகள் என 22 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அமமுகவே வெற்றி பெறும் என்றும், திமுகவுடன் சேர்ந்து எடப்பாடி ஆட்சியைக் கலைப்போம் என்றும் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் ரூ. 1.48 கோடி பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் முதல் குற்றவாளியாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வம் கைது செய்யப்பட்டு தேனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செல்வத்தை சிறையில் சந்திக்க வந்த தங்க. தமிழ்ச்செல்வன், செய்தியாளர்களிடம் கூறுகையில், திட்டமிட்டு சூழ்ச்சி செய்து ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் செல்வம் கைது செய்யப்பட் முள்ளார். அவரை ஜாமீனில் வெளியே எடுத்து இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம்.

திமுகவின் 'பி' டீம் அமமுக என அமைச்சர் ஜெயக்குமார் கூறி வருகிறார். அப்படி நாங்கள் 'பி' டீம் என்றால், நாங்கள் ஏன் தேர்தலில் தனித்து நிற்கப் போகிறோம். திமுகவோடு கூட்டணி சேர்ந்து தேர்தலில் நின்றிருக்க மாட்டோமா? என்றார் தங்க. தமிழ்ச்செல்வன்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் அதிமுக ஆட்சி மீது நம்பிக்கையில்லை. இடைத் தேர்தலில் 22 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அமமுக தான் வெற்றி பெறும். திமுகவோடு சேர்ந்து ஆட்சியைக் கலைப்போம் என்றவர், அதிமுக அரசைக் கலைக்க திமுக ஒத்துழைக்காவிட்டால், தேர்தலைச் சந்திக்க அவர்கள் பயப்படுகிறார்கள் என்றே அர்த்தம் என்றும் ஒரேயடியாக கொளுத்திப் போட்டார் தங்க. தமிழ்ச்செல்வன்

மேலும்,ஆட்சியமைக்க திமுக ஆதரவு கேட்டால் அமமுக ஆதரவு கொடுக்குமா? என்று கேள்வி கேட்டதற்கு, இல்லை என்ற தங்க.தமிழ்ச்செல்வன், தேர்தலை சந்திக்கவே அமமுக விரும்புகிறது என்றும் கூறிவிட்டார்.

You'r reading அதிமுக அரசை கவிழ்க்க திமுக ஒத்துழைக்கணும்...! இல்லைன்னா பயப்படுறீங்கனு அர்த்தம்...! தங்க. தமிழ்ச்செல்வன் தடாலடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தன்மானம்... ரோஷம்... இருந்தா ராஜினாமா பண்ணுங்க...! மோடியால் அசிங்கப் பட்ட தேர்தல் ஆணையம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்