சட்டசபை இடைத்தேர்தல்: திமுக 14-ல் ஜெயிக்கும்... அதிமுகவுக்கு 3.. மீதி...? - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு முடிவுகள்

TN Assembly by-election, India today exit poll results

தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 14 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் வெற்றி பெறுமாம். 5 தொகுதிகள் இழுபறியாகும் என்று இந்தியா டுடே வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல்18-ந் தேதி 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், இம்மாதம்    19-ந் தேதி 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த 22 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அல்லது அதிமுக ஆட்சி கவிழும் என்கிற நிலை உருவாகி இருப்பதால் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதில் 21 தொகுதிகளில் திமுக வென்றால் ஆட்சி கைமாற வாய்ப்புள்ளது. அதிமுகவுக் கோ குறைந்தது 10 தொகுதிகளிலாவது வென்றால் மட்டுமே ஆட்சியைத் தக்க வைக்க முடியும் என்ற நிலை. இந்த இடைத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு இணையாக டிடிவி தினகரனின் அமமுகவும் சரிசமமாக மல்லுக்கட்டியது. சில தொகுதிகளில் அமமுகவும் வெற்றிக்கனியை பறிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த 22 தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை இந்தியா டுடோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் திமுக 14 தொகுதிகளில் வெல்லும் என்றும்
அதிமுக 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும்
5 தொகுதிகளில் இழுபறி நிலை உள்ளது என்றும் இந்தியா டுடே கருத்து கணிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading சட்டசபை இடைத்தேர்தல்: திமுக 14-ல் ஜெயிக்கும்... அதிமுகவுக்கு 3.. மீதி...? - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு முடிவுகள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டேஸ்டி இட்லி மஞ்சூரியன் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்