அமமுக, ம.நீ.ம, நா.த.கட்சிகள் இடைத்தேர்தலில் டெபாசிட் இழப்பு!

ammk, mnm, n.t.k parties lost deposits

தமிழகத்தில் 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் கட்சியான அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானுடைய நாம் தமிழர் கட்சி ஆகியவை டெபாசிட் இழந்துள்ளனர்.

மக்களவை தேர்தலில் போட்டியிடுபவர்கள் 25 ஆயிரம் ரூபாயும், சட்டமன்ற தேர்தலில் 10 ஆயிரம் ரூபாயும் டெபாசிட் கட்ட வேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 6ல் ஒரு பங்கு ஓட்டுகளை பெற்றால் மட்டுமே அவர்களுக்கு டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும்.

அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் 6ல் ஒரு பங்கு ஓட்டுகளை பெறவில்லை. அதனால் அவர்கள் கட்டிய டெபாசிட் பணம் திரும்ப கிடைக்காது.

இதேபோல் மக்களவை தேர்தலிலும் திருச்சி சாருபாலா தொண்டைமான் போன்ற சில அமமுக வேட்பாளர்கள் மட்டுமே அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். மற்றவர்களுக்கு டெபாசிட் கிடைப்பது சந்தேகம்தான்.
மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சிகளும் பெரும்பாலான தொகுதிகளில் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று டெபாசிட்டை இழக்கின்றனர்.

You'r reading அமமுக, ம.நீ.ம, நா.த.கட்சிகள் இடைத்தேர்தலில் டெபாசிட் இழப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மக்களவை தேர்தல் இறுதி நிலவரம்! மாநிலங்கள் வாரியாக கட்சிகள் பெற்ற வெற்றி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்