பந்தயத்தில் தோற்றதால் மொட்டை அடித்த காங்கிரஸ் தொண்டர்!

Congress Worker Loses Bet To BJP Worker, Gets His Head Shaved

மத்தியப்பிரதேசத்தில் தேர்தல் பந்தயத்தில் பா.ஜ.க. கட்சிக்காரரிடம் தோற்ற காங்கிரஸ்காரர் மொட்டை அடித்தார்.

மத்தியப்பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராஜ்கார்க் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ்காரர் பாபுலால் சென்னும், பா.ஜ.க. கட்சிக்காரர் ராம்பாபு மண்ட்லோய் என்பவரும் தேர்தலையொட்டி ஒரு பந்தயம் வைத்து கொண்டனர்.

‘மோடி ஆட்சிக்கு வரவே மாட்டார், அப்படியே மீண்டும் அவர் பிரதமராகி விட்டால், நான் மொட்டை அடித்து கொள்கிறேன். ஆனால், ராகுல்காந்தி பிரதமராகி விட்டால், நீ மொட்டை அடித்து கொள்ள வேண்டும்’ என்று காங்கிரஸ்காரர் பாபுலால் சென் கூறியுள்ளார். அதை ராம்பாபுவும் ஏற்றுக் கொண்டார்.

தற்போது பா.ஜ.க.வே அமோக வெற்றி பெற்று, பிரதமராக மீண்டும் மோடியே பதவியேற்கவிருக்கிறார். இதையடுத்து, பாபுலால் சென் தான் கூறியபடி, மொட்டை அடித்து கொண்டார். அதன்பின், அவரும், ராம்பாபுவும் ஏ.என்.ஐ. புகைப்படக்காரருக்கு போஸ் கொடுத்தனர்.

You'r reading பந்தயத்தில் தோற்றதால் மொட்டை அடித்த காங்கிரஸ் தொண்டர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாபுவுக்கு கடவுள் கொடுத்த தண்டனை! ஜெகன் மோகன் ரெட்டி உருக்கம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்