மோடி அமைச்சரவையில் இடம் பிடித்த 6 பெண்கள்

six women got berth in modis ministry, 3 of them cabinet ministers

பிரதமர் மோடியின் 2வது ஆட்சியில் கேபினட் அமைச்சர்களாக 3 பெண்களும், இணை அமைச்சர்களாக 3 பெண்களும் இடம் பிடித்துள்ளனர்.

பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றார். அவருடன் 24 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றனர். தனிப்பொறுப்பு இணையமைச்சர்களாக 9 பேரும், இணையமைச்சர்களாக 24 பேரும் பதவியேற்றனர்.
பிரதமரை சேர்க்காமல் மொத்தம் 57 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். பழைய அமைச்சர்களில் 36 பேருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. அதே சமயம், 20 புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. மொத்த அமைச்சர்களில் 6 பேர் பெண்கள்.

அந்த 6 பேரில் நிர்மலா சீத்தாராமன், ஸ்மிருதி இரானி, ஹம்சித்கவுர் பாதல் ஆகியோர் கேபினட் அமைச்சர்கள். சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் சரூடா, தேபஸ்ரீ சவுத்ரி ஆகிய 3 பேர் இணை அமைச்சர்கள்.

You'r reading மோடி அமைச்சரவையில் இடம் பிடித்த 6 பெண்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆந்திராவுக்கு இடமில்லை; உ.பி.க்கு 10 அமைச்சர்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்