இணை அமைச்சர்கள்(தனிப்பொறுப்பு) இலாகாக்கள் ஒதுக்கீடு விவரம்

portfolios allocated to independant charge minister of state

மோடி அமைச்சரவையில் இணை அமைச்சர்கள்(தனிப்பொறுப்பு) ஒவ்வொருவருக்கும் துறைகள் ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றார். மேலும், 24 கேபினட் அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்பு இணையமைச்சர்கள் 9 பேரும், இணையமைச்சர்கள் 24 பேரும் பதவியேற்றனர். பிரதமரை சேர்க்காமல் மொத்தம் 57 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

தனிப்பொறுப்பு இணை அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் வருமாறு:

சந்தோஷ்குமார் கேங்வார்- தொழிலாளர் நலன் துறை

ராவோ இந்தர்ஜித்சிங் - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை.

ஸ்ரீபத்நாயக் - ஆயூர்வேதம், ஆயுஷ் மற்றும் பாதுகாப்பு துறை

ஜிதேந்திரசிங் - வடகிழக்கு வளர்ச்சி, பிரதமர் அலுவலகம்,

பணியாளர் மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி;

கிரண் ரிஜ்ஜூ - இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு, சிறுபான்மை.

பிரகலாத்சிங் படேல் - கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை

ராஜ்குமார்சிங் - மின்சாரம், புதுப்பிக்கத்தக்க சக்தி, திறன்மேம்பாடு

ஹர்தீப்சிங்புரி - வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, விமானபோக்குவரத்து, வர்த்தகம் மற்றும் தொழில் துறை

மன்சுக்மாண்ட்வியா- கப்பல், ரசாயனம் மற்றும் உரம்

இவ்வாறு தனிப் பொறுப்பு இணை அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

You'r reading இணை அமைச்சர்கள்(தனிப்பொறுப்பு) இலாகாக்கள் ஒதுக்கீடு விவரம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு உள்துறை அமைச்சர் அமித்ஷா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்