பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போரிஸ் சிறந்தவர்: டிரம்ப் கருத்து

Boris johnson will make an excellent PM Trump

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போரிஸ் ஜான்சன் பொருத்தமானவர், அவர் சிறப்பாக செயல்படுவார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து கூறியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

 

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து அந்த நாடு விலக முடிவெடுத்தது. ஆனால், அதற்கான வரைமுறைகளை வகுப்பதில் பிரதமர் தெரசா மே கொண்டு வந்த தீர்மானங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் தோல்வியுற்றன. இதையடுத்து, அவர் ஜூன் 7ம் தேதி பதவி விலக முடிவெடுத்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் உள்பட 12 பேர் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜூன் 3ம் தேதியன்று லண்டனுக்கு செல்கிறார்.
இதையொட்டி, டிரம்ப்பிடம் ‘தி சன்’ என்ற பிரிட்டன் பத்திரிகை நிருபர், ‘பிரிட்டனில் புதிய பிரதமர் பதவிக்கு யார் பொருத்தமானவர்?’ என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு டிரம்ப், ‘‘பிரதமர் பதவிக்கு போரிஸ் பொருத்தமானவர். அவர் சிறப்பாக பணியாற்றுவார். அவர் தேர்வு செய்யப்படுவாரா என்று எனக்கு தெரியாது. ஆனால், அவர் நல்ல அறிவாளி. எனக்கு அவரை பிடிக்கும்’’ என்று கருத்து தெரிவித்தார்.

You'r reading பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போரிஸ் சிறந்தவர்: டிரம்ப் கருத்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பள்ளிகள் நாளை திறப்பு... கோடை வெப்பம் தான் கொளுத்துது... ஆனாலும் மாணவர்கள் உற்சாகமோ உற்சாகம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்