பார் கவுன்சில் முதல் பெண் தலைவர் வரவேற்பு விழாவில் சுட்டுக் கொலை

UP Bar Council Chief Shot Dead In Agra Court 2 Days After her Election

ஆக்ராவில் பார் கவுன்சிலுக்கு முதல் பெண் தலைவராக தேர்வாகியிருந்த தார்வேஷ்சிங் யாதவ் என்பவரை சக வக்கீல் ஒருவர் சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம், உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. மாநிலம் ஆக்ராவில் பார் கவுன்சிலுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் தார்வேஷ் யாதவ் என்ற பெண் வக்கீல், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பார் கவுன்சிலின் முதல் பெண் தலைவர் இவர் என்ற பெருமைையயும் பெற்றார். இந்நிலையில், நேற்று பார் கவுன்சிலில் இவரக்கு வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மதியம் 3 மணியளவில் விழாவுக்கு வந்த தார்வேஷ் மேடை ஏறியதும், திடீரென மணீஷ் சர்மா என்ற வக்கீல் எழுந்து துப்பாக்கியால் தார்வேஷை சரமாரியாக சுட்டார். தார்வேஷ் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதற்கிடையே, மணீஷ் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். தற்போது மணீஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தார்வேஷ் ெகாலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அகில இந்திய பார் கவுன்சில், அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தொகை அளிப்பதாக அறிவித்திருக்கிறது.
இந்த சம்பவம், உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தார்வேஷ் கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகி்னறனர். இந்நிலையில், வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றங்களை புறக்கணித்து இரங்கல் கூட்டம் நடத்தினர்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ‘‘உ.பி.யில் கொலைகள், கற்பழிப்புகள், அரசியல் கொலைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. முதலமைச்சரோ கூட்டம் மேல் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், சட்டம் ஒழுங்கு மோசமாகிக் கொண்டே செல்கிறது.

ஆக்ராவின் முதல் பெண் பார்கவுன்சில் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். சட்டத்தை காக்க வேண்டியவர்களுக்கே இங்கே பாதுகாப்பில்லை’’ என்று ட்விட்டரில் கூறியிருக்கிறார்.

You'r reading பார் கவுன்சில் முதல் பெண் தலைவர் வரவேற்பு விழாவில் சுட்டுக் கொலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தம்பிகளுக்கு சீமான் போட்ட உத்தரவு..? சுற்றி சுழலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்