கிர்கிஸ்தானில் மெகா விருந்து.. அசைவ உணவை வெளுத்துக் கட்டிய தலைகள்... பிரதமர் மோடி சாப்பிட்டது ?

Kyrgyz president hosts lavish dinner for sco leaders, special veg for pm Modi

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஸ்கெக்கில் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு அந்நாட்டு அதிபர் கொடுத்த விருந்தில், தலைவர்கள் பலர் மாமிச உணவு வகைகளை வெளுத்துக் கட்ட, பிரதமர் மோடி மட்டும் சிம்பிளாக சைவ உணவு வகைகளை ருசித்தார்.

பிஸ்கெக் நகரில் 2 நாட்களாக நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இந்திய பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்தார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பக்கம் முகத்தைக் கூட திரும்பிப் பார்க்கவில்லை.

மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போதும் கூட, இருவரும் கை குலுக்கவோ, புன்முறுவல் செய்யவோ கூட இல்லை.மேடையில் அமரும்போது கூட இருவரும் வெவ்வேறு முனைகளில் அமர்ந்தனர்.

இந்நிலையில் இம்மாநாட்டை நடத்தும் கிர்கிஸ்தான் நாட்டின் சார்பில் அந்நாட்டின் அதிபர் சார்பில் தலைவர்களுக்கு நேற்றிரவு தடபுடல் விருந்து கொடுத்தார். இந்த விருந்தில் கிர்கிஸ்தான் நாட்டின் பாரம்பரிய உணவான மாமிசம் கலந்த 4 வகையான உணவுகளை தலைவர்கள் ருசித்துச் சாப்பிட்டனர். இந்தியப் பிரதமர் மோடிக்கு மட்டும் ஸ்பெஷலாக சிம்பிளான சைவ உணவு தயார் செய்யப்பட்டிருந்தது. வெஜிடபிள் சாலட், புலாவ், பயறு வகைகள் என உணவு பரிமாறப்பட்டது.இந்த விருந்தின் போதும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை ஏறெடுத்துக் கூட பிரதமர் மோடி பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாக். வான்வெளி வழியே பிரதமர் மோடி விமானம் பறக்காது - இந்தியா திடீர் முடிவு

You'r reading கிர்கிஸ்தானில் மெகா விருந்து.. அசைவ உணவை வெளுத்துக் கட்டிய தலைகள்... பிரதமர் மோடி சாப்பிட்டது ? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உங்களை வளர்த்த விதம் சரியில்லே : விஷால் மீது வரலட்சுமி பாய்ச்சல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்