மோடியுடன் எடப்பாடி சந்திப்பு தே.ஜ. கூட்டணியில் நீடிப்பது உறுதி

Edappadi palanichamy met prime minister today

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசியுள்ளார். அப்போது, தமிழகத்திற்கு தர வேண்டிய நிதிப்பங்கீட்டை உடனடியாக ஒதுக்கக் கோரியதுடன், அரசியல் நிலவரங்கள் குறித்தும் பேசியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. இந்த அணியில் அ.தி.மு.க. மட்டும் ஒரேயொரு தொகுதியில்(தேனி) வென்றது. மற்ற எல்லா தொகுதிகளிலும் இந்த அணி தோற்றுள்ளது. இதையடுத்து, மத்திய பா.ஜ.க. அரசு மீது மக்கள் கொண்ட வெறுப்பினால்தான், அ.தி.மு.க.வுக்கும் இவ்வளவு பெரிய தோல்வி ஏற்பட்டது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள் பேசினர்.

ஆனால், முதல்வரும், துணை முதல்வரும் அவசர, அவசரமாக அ.தி.மு.க. உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டினர். அதில், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் பா.ஜ.க. கூட்டணியைப் பற்றி இனிமேல் யாரும் வாய் திறக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், பிரதமரை வழிமொழிவதற்கு வாய்ப்பு கொடுத்ததற்காக பா.ஜ.க.வுக்கு நன்றி தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, ‘‘மோடியா, இந்த லேடியா’’ என்று கோஷத்துடன் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். அதாவது, பிரதமர் வேட்பாளராக தன்னையே அறிவித்து கொண்டார். ஆனால், இந்த முறை பா.ஜ.க.வின் பிரதமரை வழிமொழிவதற்கு அ.தி.மு.க.வுக்க வாய்்ப்பு கொடுத்ததற்கே நன்றி தெரிவித்து கட்சியில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். அந்த அளவுக்கு பா.ஜ.க.விற்கு விசுவாசமாக அ.தி.மு.க. மாறியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று(ஜூன் 15) காலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்ேபாது, தமிழகத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப்பங்கீட்டில் உள்ள நிலுவைத் தொகை, கஜா புயல் நிவாரணத் தொகை, புயல் பாதித்தவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தில் வீடுகள் ஒதுக்குதல் உள்பட பல கோரிக்கைகள் கொண்ட மனுவை பிரதமரிடம் அளித்தார்.

இதன்பின், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெறுவதால், அடுத்த தலைமைச் செயலாளராக தற்போது ஆளுநரின் செயலாளராக உள்ள ராஜகோபாலை நியமிப்பது குறித்தும், புதிய டி.ஜி.பி.யாக ஜாபர்சேட்டை நியமிப்பது குறித்தும் பிரதமரிடம் அவர் பேசியதாக தெரிய வருகிறது.

மேலும், உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளுடன் இதே கூட்டணியை தொடர்வது குறித்தும் அவர் ஆலோசித்ததாக தெரிய வருகிறது. தமிழகத்திற்கு புதிய திட்டங்களை அளிப்பதன் மூலமும், தி.மு.க.வினர் மீதான பழைய வழக்குகளை தூசி தட்டுவதன் மூலமும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று அவர்கள் பேசியதாகவும் தெரிகிறது.

அதிமுக ஆலோசனைக் கூட்டம் ; 2 அமைச்சர்களும் பங்கேற்காததால் பரபரப்பு

You'r reading மோடியுடன் எடப்பாடி சந்திப்பு தே.ஜ. கூட்டணியில் நீடிப்பது உறுதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்த பாக்யராஜ் அணி சதித் திட்டமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்