என்னை நீ்க்க வேண்டியதுதானே? தங்கத் தமிழ்ச்செல்வன் பேட்டி

Remove me from the party, thankatamilchelvan dares ttv dinakaran

‘என்னை பிடிக்கவில்ைல என்றால், கட்சியில் இருந்து நீக்க வேண்டியதுதானே’’என்று தங்கத்தமிழ்ச் செல்வன் பேட்டியளித்துள்ளார்.

அ.ம.மு.க. கொள்கைபரப்பு செயலாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி இரண்டு நாளாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தங்கத் தமிழ்ச் செல்வன் அந்த ஆடியோவில், ‘‘நான் விஸ்வரூபம் எடுத்தால், டி.டி.வி.தினகரனே தாங்க மாட்டார். அவர் இந்த மாதிரி கேவலமான அரசியல் செய்யக் கூடாது...’’ என்று கூறியதுடன் சில ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனையும் செய்திருக்கிறார்.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி அவரை தொடர்பு கொண்டு கருத்து கேட்டது. அப்போது அவர், ‘‘கட்சியில் நிர்வாகம் சரியில்லை. நெல்லை, கோவை மண்டல பொறுப்பாளர்களால்தான் கட்சியே அழிந்து போனது. இதை சரி பண்ணுங்க என்ற ஊடகங்களில் நான் பேசியது உண்மைதான்.

அதற்கு என்னை அழைத்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அதை செய்யாமல், சில சமூக ஊடகங்களில் என்னை பற்றி தவறாக செய்திகளை பரப்பியதால், எனக்க மனசு கஷ்டமாக இருந்தது. என் மீது தவறு இருந்தால், கட்சியில் இருந்து நீக்க வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு இப்படி சின்னத்தனமான செயல்களில் ஈடுபடுவதா? நான் நேர்மையானவன். நான் சொல்வது பிடிக்கவில்லை என்றால் கட்சியில் இருந்து நீக்கலாம்’’ என்றார்.

இந்த விவகாரம் குறித்து அமமுகவைச் சேர்ந்த வெற்றிவேல் கூறுகையில், ‘‘அந்த ஆடியோ உண்மைதான். அவருக்கு மனநிலை சரியில்லை என்று நினைக்கிறேன். அவரை நல்ல மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெறுவதுதான் சிறந்தது என்று கூறியுள்ளார்.

பெங்களூரு புகழேந்தி கூறுகையில், ‘‘தங்கத்தமிழ்ச் செல்வன் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்காமல் தொடர்ந்து இப்படி பேசுகிறார் என்றால், அவர் ஏதோ திட்டமிட்டுத்தான் பேசுகிறார் என்று தெரிகிறது’’ என்றார்.

தனிக்கட்சியா, மீண்டும் இணைப்பா... தினகரன் கட்சியினர் மனநிலை என்ன?

You'r reading என்னை நீ்க்க வேண்டியதுதானே? தங்கத் தமிழ்ச்செல்வன் பேட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இனி அமமுகவில் இடமில்லை... தங்க.தமிழ்ச்செல்வன் தஞ்சமடைவது திமுகவா? அதிமுகவா?- ஒரே பரபரப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்