ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கு தடையை நீட்டித்தது சுப்ரீம்கோர்ட்

supreme court extended the stay to Arumugaswamy enquiry Commission

ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணைக்கு மேலும் 4 வாரங்களுக்கு தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக எழுந்த புகார் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் விசாரி்தது வருகிறது. இந்த கமிஷனில் ஏற்கனவே அப்போலோ டாக்டர்கள் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், மீண்டும் அந்த டாக்டர்களும், அப்போலோ மருத்துவமனை டெக்னீசியன்களும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து அப்போலோ நிர்வாகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போலோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போலோ நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி கமிஷன் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், ஆறுமுகசாமி கமிஷன் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, ஆறுமுகசாமி கமிஷனின் பதவிக்காலம் ஜூன் 24 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், தமிழக அரசு அதற்கு முன்பாக அந்த கமிஷனின் பதவிக்காலத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து, உத்தரவு பிறப்பித்தது.

இனி அமமுகவில் இடமில்லை... தங்க.தமிழ்ச்செல்வன் தஞ்சமடைவது திமுகவா? அதிமுகவா?- ஒரே பரபரப்பு

You'r reading ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கு தடையை நீட்டித்தது சுப்ரீம்கோர்ட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராஜ்யசபா தேர்தல்; திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு... சண்முகம், வில்சன் ஆகியோருக்கு அதிர்ஷ்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்