மத்திய அரசு பணியில் 7 லட்சம் காலியிடங்கள் நாடாளுமன்றத்தில் தகவல்

Nearly 7 lakh government posts vacant: Minister in Lok Sabha

மத்திய அரசு பணிகளில் கடந்த ஆண்டு நிலவரப்படி ஏழு லட்சம் காலியிடங்கள் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் முந்தைய ஆட்சியில் வேலையில்லத் திண்டாட்டம் அதிகரி்த்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில், மத்திய அரசில் 7 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

மக்களவையில் பா.ஜ.க. உறுப்பினர் தர்ஷணா ஜர்தேஷ், காங்கிரஸ் உறுப்பினர் தீபக் பைஜ் ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் கேங்வார் கூறியதாவது:

மத்திய அரசில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் இறுதி வரை 7 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது வரை எத்தனை இடங்கள் காலியாக உள்ளது என்பது தெரியவில்லை. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாநில அரசுகளும் முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

மத்திய அரசின் துறைகளில் மொத்தம் 38 லட்சத்து 3 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் தற்போது 31 லட்சத்து 19 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கின்றன. ரயில்வே துறையில் மட்டுமே 2 லட்சத்து 60 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை வரும் ஆண்டில் விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சந்தோஷ் கேங்வார் தெரிவித்தார்.

லோன் தர்றியா, சுட்டுத் தள்ளவா? பீதியில் பீகார் வங்கி அதிகாரிகள்

You'r reading மத்திய அரசு பணியில் 7 லட்சம் காலியிடங்கள் நாடாளுமன்றத்தில் தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அ.தி.மு.க.வுக்கு ஜாதகம் நன்றாக உள்ளது; எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்