ராஜ்யசபா தேர்தல் வைகோ, சண்முகம், வில்சன் வேட்பு மனு தாக்கல்

Rajya sabha election, vaiko and Dmk candidates filed nomination

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மதிமுக பொதுச் செயலாளர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள சண்முகம், வில்சன் ஆகியோரும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு வரும் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத்தாக்கலும் நடைபெற்று வருகிறது. இந்த 6 இடங்களில் திமுகவும், அதிமுகவும் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. திமுக சார்பில் அக்கட்சியின் தொழிற்சங்கத்தின் செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு இடத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இன்று காலை தமிழக சட்டப்பேரவை செயலர் சீனிவாசனிடம் வைகோ வேட்பு மனுத்தாக்கல் செய்தார். வைகோ வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்பு, திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் ஆகியோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுத்தாக்கலின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், திமுக முன்னாள் அமைச்சர்கள் துரைமுகன் க.பொன்முடி, | எ.வ.வேலு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகளும், மதிமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

தீர்ப்பை பார்த்து எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது; வைகோ பரபரப்பு பேட்டி

You'r reading ராஜ்யசபா தேர்தல் வைகோ, சண்முகம், வில்சன் வேட்பு மனு தாக்கல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இன்னுமா பிரிட்டிஷ் சர்க்கார் நடக்குது? 82 வயது முதியவர் கொந்தளிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்