மக்கள் வரிப் பணத்தில் ஜெ. நினைவிடம் அவசியமா? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

What is the need for making jeyas house as memorial place? : high court aks tamilnadu government

மக்களின் வரிப்பணத்தில் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ெசாந்த வீட்டில் வசித்து வந்தார். அவர் இறந்த பிறகு வேதா நிலையம் என்ற அந்த பங்களா யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை ஏற்பட்டது. ஜெயலலிதாவுடன் வசித்து வந்த சசிகலாவும் சிறைக்கு சென்று விட்ட நிலையில், சசிகலாவின் குடும்பத்தினரும் அங்கு செல்வதை தவிர்த்தனர்.

இதன்பிறகு, அந்த வீட்டை அரசே கையகப்படுத்தி, ஜெயலலிதாவின் நினைவிடமாக்க எடப்பாடி-ஓபிஎஸ் அரசு முடிவெடுத்தது.

இதற்காக, போயஸ் கார்டன் பகுதில் வசிப்பவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் ஜெ.தீபக் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில் அவர்கள், ‘‘நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வேதா நிலையத்தை வெறும் ரூ.35 கோடிக்கு அரசு வாங்க உள்ளதாகவும், தங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது’’ என்றும் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘மக்களின் வரிப்பணத்தில் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது?ஜெயலலிதாவின் புகழை பரப்புவதற்கு எத்தனையோ வழி இருக்கிறது. அமைச்சர்கள் தினமும் ஜெயலலிதாவின் புகழைத்தான் பாடுகின்றனர். கோடநாட்டில் ஜெயலலிதா தங்கியிருந்தார் என்பதற்காக அதையும் நினைவு இல்லமாக மாற்றுவீர்களா?” என்றெல்லாம் நீதிபதிகள் கேட்டனர். இதன்பின், அரசு பதிலளிக்கக் கூறி, விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

You'r reading மக்கள் வரிப் பணத்தில் ஜெ. நினைவிடம் அவசியமா? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆட்சியைக் காப்பாற்ற குமாரசாமி இறுதி முயற்சி; அதிருப்தியாளர்களுடன் பேச்சு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்