முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதா? மு.க.ஸ்டாலின் காட்டம்

stalin accussed minister c.v.shunmugam in neet issue

நீட் விலக்கு மசோதா குறித்த உண்மையான தகவலை சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் மறைத்து விட்டார் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான நீட் தகுதித் தேர்வில், தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதா குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டு விட்டதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு ெதரிவித்தது.

இந்நிைலயில், இந்த விவகாரம் ெதாடர்பாக, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவர் பேசுகையில், ‘‘தமிழக அரசின் சட்டமசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சட்டத் துைற அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த தகவல் பொய்யானது.

சட்டமசோதாக்களை 2017ம் ஆண்டு செப்டம்பரிலேயே மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. ஆனால், இந்த தகவலை அமைச்சர் மறைத்து விட்டு சட்டமன்றத்தில் பொய் கூறியுள்ளார். பொய்யான தகவலை தெரிவித்த அமைச்சர் சண்முகம் பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சண்முகம், ‘‘நான் கூறிய தகவல் பொய்யானதாக இருந்தால் பதவி விலகத் தயார். ஆனால், நான் கூறியது உண்மை என்றால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பதவி விலகத் தயாரா?’’ என்று சவால் விடுத்தார். இதனைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ‘‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் இருந்து 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அந்த மசோதாக்கள் கிடப்பில் உள்ளது.

இது தொடர்பாக நான் கேள்வி எழுப்பிய போது, அமைச்சர் சி.வி.சண்முகம் பொய் கூறியுள்ளார். தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தான் அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், 22ம் தேதி செப்டம்பர் 2017ம் ஆண்டு மத்திய அரசு சார்பில் தமிழக அரசின் மசோதாக்கள் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

சுமார் 19 மாதங்களாக இந்த கடிதம் குறித்து அமைச்சர் சண்முகம் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. அவர் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

வேலூர் மக்களவை தேர்தல்; திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்.. அதிமுக கூட்டணியில் ஏ.சி.எஸ்

You'r reading முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதா? மு.க.ஸ்டாலின் காட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'கடமை தவறிவிட்டார் கர்நாடக சபாநாயகர்' ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்