தேசத்துரோக வழக்கில் வைகோ மேல்முறையீடு

vaiko appeals against special court ruling of his imprisonment in supreme court

தேசத்துரோக வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்திருக்கிறார்.

கடந்த 2009ம் ஆண்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. கடந்த 5-ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. வைகோ மீதான தேசத்துரோக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், “தேசத்துரோக வழக்கில் எனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு சட்ட விரோதமானது. ஏற்கனவே எனக்கு இதே போன்ற குற்றச்சாட்டுக்காக தொடரப்பட்ட வழக்கில் விடுதலை செய்யப்பட்டனே். எனவே எனக்கு வழங்கப்பட்டுள்ள ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். மேல்முறையீடு மனு விசாரணை முடிவடையும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்” என கூறியுள்ளார். இம்மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.

தீர்ப்பை பார்த்து எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது; வைகோ பரபரப்பு பேட்டி

You'r reading தேசத்துரோக வழக்கில் வைகோ மேல்முறையீடு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரயில் தண்ணீர் போதவில்லை; சென்னையில் ஒரு லாரி தண்ணீர் 5000 ரூபாய்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்