செங்கல்பட்டு, தென்காசி புதிய மாவட்டங்கள் உதயம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Tenkasi and Chengalpattu new district headquarters, CM edappadi Palani Samy announced in assembly

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பில் புதிதாக செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றார்.

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்றும், காஞ்சிபுரம் மாவட்டத்தையும் இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதல்வர் பழனிச்சாமி 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.
இந்த புதிய மாவட்டங்களுக்கு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த கூட்டத்தொடரின் போது விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந் நிலையில், தற்போது தென்காசி, செங்கல்பட்டு என மேலும் 2 மாவட்டங்கள் உதயமாகியுள்ளதால் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

ஆடிக்காற்றில் அம்மாவின் ஆட்சி பறந்து போய் விடும்: திமுக

You'r reading செங்கல்பட்டு, தென்காசி புதிய மாவட்டங்கள் உதயம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இது மழை நீர் அல்ல.. தாகம் தீர்க்கும் குடிநீர்..! அதிகாரிகளின் அலட்சியத்தால் வீண்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்