நாடாளுமன்றத் தொடரை 10 நாட்கள் நீட்டிக்க முடிவு

Government Likely To Extend Parliament Session By 10 Days: Report

நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, நாடாளுமன்றம் கடந்த மாதம் 17ம் தேதி கூடியது. இதன்பிறகு, இம்மாதம் 5ம் தேதியன்று மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார். இதன்பின், பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்றது.

எனினும், எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி விடுகின்றனர். இதனால், இரு அவைகளுமே குறைந்த நேரம் மட்டுமே செயல்படுகின்றன. இந்த கூட்டத் தொடர் வரும் 26ம் முடிவடையவுள்ளது. இந்நிலையில், ஏராளமான சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

இதனால், இந்த கூட்டத் தொடரை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக எதிர்க்கட்சிகளிடம் மத்திய அரசுதரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘‘இந்த கூட்டத் தொடரை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க யோசித்து வருகிறோம். இது பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

வீட்டுக்கடன் வட்டியில் வருமான வரி சலுகை; பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?

You'r reading நாடாளுமன்றத் தொடரை 10 நாட்கள் நீட்டிக்க முடிவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டிரம்ப்பின் பொறுப்பற்ற பேச்சு: மன்னிப்பு கேட்ட அமெரிக்க எம்பி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்