அடுத்தது மகாராஷ்டிராவில் என்.சி.பி, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

In maharastra 2 ncp mlas and one congress mla resigned to join bjp

கர்நாடகாவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் என்.சி.பி, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள், பாஜகவில் சேருவதற்காக இன்று பதவிைய ராஜினாமா செய்துள்ளனர்.

நாடாளுமன்றத் ேதர்தலில் பாஜக 303 தொகுதிகளில் ெவன்று மீண்டும் ஆட்சியமைத்தது. அதன்பிறகு, அந்த கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுத்தது. அடுத்து, கோவாவில் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுத்தது. இதன்பின், கர்நாடகாவில் பாஜக தனது ஆட்டத்தை தொடங்கியது.

அங்கு ஆளும் கூட்டணியில் அதிருப்தியடைந்த 16 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பினர். காங்கிரசில் இருந்து 13 எம்.எல்.ஏ.க்கள், மதசார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து 3 எம்.எல்.ஏ.க்கள் என்று 16 எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்தனர். அவர்கள் பாஜகவில் சேர்ந்து அதன்பின் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகி விடலாம் என்று நினைத்திருந்தனர். ஆனால், சபாநாயகர் ரமேஷ்குமார் அவர்களை தகுதிநீக்கம் செய்து விட்டார். அவர்கள் இப்போது உச்சநீதிமன்றத்திற்கு போயிருக்கின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளாக உள்ள தேசியவாத காங்கிரஸ்(என்சிபி), காங்கிரஸ் கட்சிகளில் இருந்து ஆள் இழுக்கும் படலத்தை பாஜக ஆரம்பித்துள்ளது. என்சிபி கட்சியின் சந்திப் நாயக், வைபவ் பிச்சாத் ஆகிய எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிதாஸ் கொளம்கர் ஆகியோர் இன்று சபாநாயர் ஹரிபாபு பகடேவிடம் தங்கள் ராஜினமா கடிதங்களை அளித்தனர். அவர்கள் பாஜகவில் சேரவிருப்பதை ஏற்கனவே அறிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில், ‘‘மத்திய பாஜக அரசு, அமலாக்கப்பிரிவு போன்ற துறைகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை மிரட்டி இழுக்கிறார்கள். இதற்காக கவலைப்படவில்லை. கடந்த 1980ம் ஆண்டில் நான் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த போது, வெளிநாடு டூர் சென்றிருந்தேன். அப்ேபாது காங்கிரசில் இருந்து 60 எம்.எல்.ஏ.க்களில் 6 பேரைத் தவிர மீதிப் பேர் கட்சி தாவினர். ஆனால், அடுத்த தேர்தலில் அவர்கள் தோற்று போனார்கள். எனக்கு மீண்டும் 60 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தார்கள்’’ என்றார்.

தலைவர் பதவி வேண்டாம்; ராகுல் தொடர்ந்து பிடிவாதம், அரசர் கெஞ்சல் பலிக்கவில்லை

You'r reading அடுத்தது மகாராஷ்டிராவில் என்.சி.பி, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சயன கோலத்தில் அத்திவரதர்; நாளை மதியம் வரை தரிசனம் ஆக.1 முதல் நின்ற கோலத்தில் காட்சி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்