ராஜ்யசபா உறுப்பினராக மன்மோகன் பதவியேற்பு

Former Prime Minister ManmohanSingh takes oath as Rajya Sabha member from Rajasthan

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக இன்று பதவியேற்று கொண்டார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன்சிங். ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த மன்மோகன்சிங்கின் பொருளாதார நிபுணத்துவம் மீது நம்பிக்கை கொண்டிருந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், கடந்த 1991ம் ஆண்டில் மன்மோகனை நிதியமைச்சர் ஆக்கினார். அப்போது அவர் அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அது முதல் அவர் ராஜ்யசபா உறுப்பினராக கடந்த 29 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார்.

கடந்த ஜூன் மாதத்தில் மன்மோகன்சிங்கின், ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைந்தது. ஆனால், இந்த முறை அசாம் சட்டசபையில் காங்கிரஸ் பலம் குறைந்து விட்டதால், அங்கிருந்து மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக மன்மோகன் சிங்கால் தேர்வாக முடியவில்லை.

ராஜஸ்தானில் பாஜக ராஜ்யசபா உறுப்பினர் மதன்லால் சைனி மரணமடைந்ததால், அங்கு தேர்தல் நடைபெற்றது. இதில் மன்மோகன்சிங் போட்டியிட்டார். அம்மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு பெரும்பான்மை உள்ளதால், பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. இதனால். மன்மோகன்சிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ராஜ்யசபா உறுப்பினராக மன்மோகன்சிங் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு

You'r reading ராஜ்யசபா உறுப்பினராக மன்மோகன் பதவியேற்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ப.சிதம்பரத்தின் மேல் முறையீட்டு மனு ; திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்