மோடி பிறந்த நாள் விழா பாஜகவின் சேவை வாரம்

To mark Modis birthday on Sept 17, BJP to observe service week

பிரதமர் மோடியின் 69வது பிறந்த நாளையொட்டி, செப்.14 முதல் செப்.20 வரை சேவை வாரமாக கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு செப்டம்பர் 17ம் தேதியன்று 69வது பிறந்த நாள். இதையொட்டி, பாஜக சார்பில் சேவை வாரம் கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, செப்டம்பர் 14ம் தேதி முதல் செப்டம்பர் 20ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக கட்சியின் துணைத் தலைவர் அவினாஷ் ரவி கன்னா தலைமையி்ல் 4 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பாஜக பொதுச் செயலாளர் அருண்சிங், மாநில தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘சேவை வாரத்தின் போது, ரத்த தான முகாம்கள், இலவச மருத்துவச் சிகிச்சை முகாம்கள், இலவச அறுவை சிகிச்சைகள், கண்சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட வேண்டும். முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள். சிறுவர் காப்பகங்களுக்கு சென்று பழங்கள், உணவு அளிக்க வேண்டும். மாநில நிர்வாகிகள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களை சந்தித்து பிரதமரின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்த புத்தகங்களை அளிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

சிறந்த நிகழ்ச்சிகள், வித்தியாசமான சேவைகள் குறித்த தகவல்கள் நமோ ஆப்ஸ் மூலமாக பெறப்படும் என்றும் அருண்சிங் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறையின் அடுத்த குறி கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் அவசர, அவசரமாக சம்மன்

You'r reading மோடி பிறந்த நாள் விழா பாஜகவின் சேவை வாரம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வங்கி இணைப்பு நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்