திமுக கொடுத்த ரூ.25 கோடி.. கம்யூனிஸ்ட் விளக்கம் தருமா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி..

will dmk and communist parties explain about Rs.25 crore Election funds?

நாடாளுமன்றத் தேர்தல் நிதியாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக கொடுத்த ரூ.25 கோடி கொடுத்தது குறித்து அந்த கட்சிகள்தான் விளக்கம் ெகாடுக்க வேண்டும் என்று பிரேமலதா கூறினார்.

பழனிக்கு இன்று காலை வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், மலைக்கு சென்று முருகனை தரிசனம் செய்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேமுதிக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்று முருகனை வேண்டிக் கொண்டேன். விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலிலும், அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல்களிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்.

குறுக்கு வழியில் முன்னேற நினைப்பவர்களே நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்கிறார்கள். நல்ல முறையில் படித்து டாக்டர் ஆகும் மாணவர்களே சேவை மனப்பான்மையுடன் பணிபுரிவார்கள்.

மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 25 கோடி ரூபாயை தேர்தல் நிதியாக திமுக வழங்கியதாக வரும் தகவலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், கம்யூனிஸ்ட் கட்சியினரும்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு பிரேமலதா கூறினார்.

You'r reading திமுக கொடுத்த ரூ.25 கோடி.. கம்யூனிஸ்ட் விளக்கம் தருமா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பரூக் அப்துல்லாவை விடுவிக்க கோரிய வைகோ மனு தள்ளுபடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்