உள்ளாட்சித் தேர்தல்.. தேமுதிக 7ல் ஆலோசனை

Dmdk district secrataries meet on nov 7th

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 7ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

தேமுதிக தலைமைக் கழகம் வௌியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், கட்சியின் நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் வரும் 7ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறும். சென்னை கோயம்பேட்டிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு வாய்ப்புள்ள இடங்கள் குறித்தும், அதிமுக கூட்டணியில் பெற வேண்டிய இடங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

You'r reading உள்ளாட்சித் தேர்தல்.. தேமுதிக 7ல் ஆலோசனை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வக்பு வாரிய இடங்களில் அயோத்தி நிகழ்வுகளுக்கு தடை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்