நான் திருக்குறள் படிக்கிறேன்: பிரதமர் இன்னும் திறக்கவேயில்லை - ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை செய்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, தமிழுணர்வை புரிந்துகொள்வதற்காக தாம் திருக்குறள் படித்து வருவதாக கூறியுள்ளார். மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தி, கரூர் பேருந்து நிலையத்தில் பேசும்போது, "எவ்வளவு வலிமை குன்றியவர்களாக இருந்தாலும் தமிழ் மக்கள் கௌரவத்தையும் சுய மரியாதையையும் தமிழுணர்வையும் பேணுவார்கள்.

நான் தமிழுணர்வை புரிந்துகொள்ள விரும்புகிறேன். ஆகவே திருக்குறளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். இந்த நேர்மறை மனப்பான்மையும், உறுதியான நம்பிக்கையும், சுய மரியாதையும் ஏதோ புதிதான ஒன்றல்ல; அது உங்கள் மொழியிலும் பண்பாட்டிலும் ஊடாக இணைந்துள்ளது," என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடி தமிழுணர்வை மதிக்கவில்லை. அவர் இன்னும் திருக்குறள் புத்தகத்தை திறக்கவேயில்லை.

இந்த நூலை வாசித்திருந்தால் தமிழ் மக்களின் மொழியையும் பண்பாட்டையும் மதிப்பதற்கு அவர் புரிந்துகொண்டிருப்பார் என்று ராகுல் காந்தி கூறினார். பின்னர் விவசாயிகள் கருத்தரங்கில் பேசிய ராகுல் காந்தி, புதிய வேளாண் சட்டங்களை விமர்சித்ததோடு அது குறித்த தகவல்கள் உள்நோக்கத்தோடு விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது. மண்டி முறை அழிக்கப்படுவதோடு விவசாயிகள் தங்கள் பாதுகாப்புக்காக நீதிமன்றங்களை நாடுவதையும் புதிய வேளாண்சட்டங்கள் தடுக்கின்றன என்று கூறினார்.

You'r reading நான் திருக்குறள் படிக்கிறேன்: பிரதமர் இன்னும் திறக்கவேயில்லை - ராகுல் காந்தி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பறவை காய்ச்சல்: ஆஃப் ஆயிலுக்கு நோ சொன்ன ஆணையம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்