ஆயிரம் ரூபாய் வருமானமா? கடும் விமர்சனங்களால் சீமான் காட்டிய புதுகணக்கு..


சீமான், தனது ஆண்டு வருமானம் ரூ.1000 என்று குறிப்பிட்டதை மாற்றி, ரூ.4.72 லட்சம் என எழுதி புதிய வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக கட்சிகளின் ஊழல்களை கடுமையாக விமர்சிப்பவர். அதனால் அவரது பேச்சுகள் இளைஞர்களை கவர்ந்தது. ஆனால், சமீப காலமாக அவரது இயக்கத்தில் வெளியே சென்றவர்களே அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தற்போது, சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த போது அதில் அவரது வருமான விவரங்கள் குறித்த அபிடவிட் தாக்கல் செய்திருந்தார். அதில், அவர் தனக்கு ரூ.31 லட்சத்து 6500 சொத்து உள்ளதாகவும், மனைவிக்கு ரூ63 லட்சம் அசையும் சொத்து மற்றும் ரூ.25 லட்சம் அசையா சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், தனக்கு கடந்த 2019-2020ம் ஆண்டில் வெறும் ரூ.1000 மட்டுமே வருமானம் வந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அவரை டிரோல் செய்து கடும் விமர்சனங்கள் வந்தன. வெறும் ரூ.1000 வருமானத்தில் சீமான் எப்படி அடிடாஸ் சூ பணக்காரர்களின் டென்னிஸ் விளையாட்டு விளையாடுகிறார் என்று அந்த படத்தை போட்டிருந்தனர். இதே போல், ஆயிரம் ரூபாயில் சீமான் எப்படி வாழ்க்கை நடத்துகிறார் என்று பலவிதமாக கமென்ட்ஸ் வந்தன.

இதையடுத்து, சீமான் தனது வருமானக் கணக்கை தவறுதலாக குறிப்பிட்டு விட்டதாகக் கூறி, புதிய அபிடவிட் தாக்கல் செய்திருக்கிறார். அதில் சீமானுக்கு 2019-2020ம் ஆண்டில் வருமானம் 4 லட்சத்து 72,900 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சீமானுடைய வருமானம் 2015-16ல் ரூ.4,63,690 என்றும், 2016-2017ம் ஆண்டில் ரூ.3,91,220 என்றும், 2017-18ம் ஆண்டில் ரூ.4,42,610 என்றும், 2018-2019ல் ரூ.4,51,250 என்றும் கூறப்பட்டுள்ளது. சீமான் மனைவி கயல்விழியின் ஆண்டு வருமானமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2016-2017, 2017-2018 நிதியாண்டுகளில் சீமான் மனைவிக்கு வருமானம் இல்லை என இருந்தது. அதை திருத்தி, 2016-2017ம் ஆண்டில் ரூ.2,65,890, 2017-18ம் ஆண்டில் 2,82,900 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

You'r reading ஆயிரம் ரூபாய் வருமானமா? கடும் விமர்சனங்களால் சீமான் காட்டிய புதுகணக்கு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மனைவியை கொல்ல முயன்ற வக்கீலுக்கு 10 ஆண்டு கடுங்காவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்