`நேற்று மோடி பேசியதும், தொடர்ச்சியான மூன்று விஷயங்களும்.. கிளம்பிய விவாதம்!

பிரதமர் மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடையே உரையாடினார். அப்போது ``நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க இயலும் என நம்புகிறேன். தற்போதைய கொரோனா பாதிப்பில் இருந்து நம்மால் மீண்டுவர முடியும். ஆக்சிஜன் தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும். கொரோனா 2-வது அலையால் மீண்டும் நாம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம்" என்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

கொரோனா தடுப்பூசிகளைப் பொதுமக்கள் போட்டுக்கொள்ள வேண்டுமென்று நேற்று மோடி பேசிய பின்னும், முன்னும் மூன்று விஷயங்கள் நடந்துள்ளன... கொரோனா தடுப்பூசி விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை இனி மாநிலங்களே வாங்கிக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே 1-லிருந்து,18 வயதுடையோர் முதல், தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது...

இதன்மூலம் இன்னும் 50 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போடும் சூழல் வந்துள்ளது. தடுப்பூசி போடுவது நல்ல விஷயமென்று பொதுமக்களுக்கு மருத்துவர்கள் விழிப்புணர்வூட்டிவரும்போது, மத்திய அரசு இப்படிச் செயல்படுவதுதான் மீண்டும் தடுப்பூசி மீது விவாதத்தை உருவாக்குகிறது! மோடி நேற்று பேசியது மக்களுக்காகவா? தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களின் நன்மைக்காகவா? மத்திய அரசுக்கும் மோடிக்கும் வெளிச்சம் என்று நெட்டிசன்கள் விவாதங்களை கிளப்பி வருகின்றனர்.

You'r reading `நேற்று மோடி பேசியதும், தொடர்ச்சியான மூன்று விஷயங்களும்.. கிளம்பிய விவாதம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `இவ்வளவு நாள் ஆலோசித்து தான் செய்தார்களா என்ன?... ஆக்சிஜன் சம்பவத்தில் உதயநிதி விமர்சனம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்