சடலங்களை எரிக்க டோக்கன் கொடுக்கும் இடுகாடுகள்... டெல்லியில் தொடரும் மோசமான நிலை!

தலைநகர் டெல்லியில்கங்காராம் தனியார் மருத்துவமனையில், ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, மருத்துவமனையின் இயக்குனர் கூறுகையில், கங்காராம் மருத்துவமனையில், 500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 140-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் வாயிலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த, 25 பேர் இறந்துவிட்டனர்.

இன்னும் சில மணி நேரத்துக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளது. 60-க்கும் மேற்பட்ட நோயாளிகள், ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். விமானத்திலாவது, ஆக்சிஜன் உடனடியாக எடுத்து வரப்பட வேண்டும்” என்று நேற்று தெரிவித்திருந்தார். கங்காராம் மருத்துவமனை மட்டுமின்றி, டில்லியில் உள்ள ஏராளமான பெரிய மற்றும் சிறிய மருத்துவமனைகள், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன.

இது தான் தற்போது டெல்லியின் நிலை அங்கு கொரோனா காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து இடுகாடுகளில் சடலங்களை எரிக்க டோக்கன் கொடுக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள பல இடுகாடுகள் 24 மணி நேரமும் தொடர்ந்து எரிகின்றன. ஒரு நாளைக்கு 289 சடலங்களை மட்டுமே எரிக்க முடியும் என்ற நிலை தற்போது அதிகரித்து இருக்கிறது. தற்போது இந்த எண்ணிக்கை 400 ஆக உயர்த்தி இருக்கிறது தெற்கு டெல்லி மாநகராட்சி. இடுகாட்டில் இருக்கக்கூடிய கான்ட்ராக்டர்கள் ஒரு சடலத்தை எரிக்க ரூ.22,000 முதல் ரூ.25,000 வரை பணம் கேட்பதாக சொல்லப்படுகிறது.

You'r reading சடலங்களை எரிக்க டோக்கன் கொடுக்கும் இடுகாடுகள்... டெல்லியில் தொடரும் மோசமான நிலை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இ-பாஸ் கட்டாயம்.. தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்