சுற்றுச்சூழல் குறித்து பேசுவதே குற்றமா? - கமல் ஹாசன்

சுற்றுச்சூழல் குறித்து பேசுவதே குற்றமா?

சுற்றுச்சூழல் குறித்து பேசுவதே குற்றம் எனக் கூறுவதை ஏற்க முடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். அதனை பதிவு செய்வதற்காக கமல்ஹாசன் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் அலுவலகத்திற்கு சென்றார்.

சந்திப்பிற்கு பிறகு பேசிய கமல் ஹாசன், இன்னும் 10 தினங்களுக்கும் புதிய கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் என நம்பிக்கை தெரிவித்தார். சின்னம் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார்.

இந்நிலையில், சேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை குறித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன், “சுற்றுச்சூழல் குறித்து பேசுவதே குற்றம் என்பதை ஏற்க முடியாது” எனக் கூறினார்.

You'r reading சுற்றுச்சூழல் குறித்து பேசுவதே குற்றமா? - கமல் ஹாசன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பந்தை சேதப்படுத்திய விவகாரம்: இம்முறை சிக்கியது இலங்கை கேப்டன்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்