காற்றாலை மின்சார ஊழல்... ஆவணங்களை வெளியிட்ட ஸ்டாலின்

காற்றாலை மின்சார ஊழல்

காற்றாலை மின்சாரத்துறையில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆவணங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

தமிழக மின்சார துறையில் காற்றாலை மின்சார உற்பத்தி என்ற பெயரில் ஊழல் நடந்திருப்பதாக கூறி திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதனை மறுத்த அமைச்சர் தங்கமணி பொய்யான குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என கூறினார்.

இந்நிலையில், காற்றாலை மின்சாரத்துறையில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆவணங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், ஊழல் நடக்கவில்லை என்று இப்போதும் அமைச்சர் கூறுவாரேயானால், மின்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காற்றாலை மின்சாரத்தில் நடைபெற்றுள்ள இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட தயாரா?" எனக் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, அமைச்சர் தங்கமணி மீதான காற்றாலை மின்சார கொள்முதல் ஊழல் விவகாரத்தில் முழு விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

You'r reading காற்றாலை மின்சார ஊழல்... ஆவணங்களை வெளியிட்ட ஸ்டாலின் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தாம்பரத்தில் ஐஎம்எஸ் பெண்கள் கூடுகை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்