நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார்

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். அதற்கு பிறகு பேசிய சீமான், முகமது நபிகள் மற்றும் மோசஸ் ஆகியோரைப் போன்று பத்து கட்டளைகளை தெரிவித்துவிட்டு எங்கோ சென்று விடுகிறார் ரஜினிகாந்த் என கருத்து தெரிவித்தார்.

இது இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, இரு அமைப்பைச் சேர்ந்தவர்களும் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர் .

குறிப்பாக இரு மதத்திலும் இறைத்தூதர்களாக கருதப்படும் நபிகள் நாயகம் மற்றும் மோசஸ் ஆகியோரை நடிகர் ரஜினிகாந்துடன் ஒப்பிட்டு அவமதித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். எனவே மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாகக் கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

You'r reading நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அனில் அம்பானி வெளிநாடு செல்ல தடை கோரி வழக்கு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்