நக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு!

Egmore court refuses to send to jail Nakheeran Gopal

நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட சென்னை அல்லிக்குளம் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஐபிசி 124வது பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது.124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதில் முகாந்திரம் இல்லை என்றும் 124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்தது செல்லாது என்றும் நீதிபதி கோபிநாத் தெரிவித்துள்ளார்.

ஆளுனரை மிரட்டும் வகையில் நக்கீரன் கட்டுரையில் கோபால் எதுவும் எழுதவில்லை என்று கூறிய நீதிபதி கோபாலை சிறையில் அடைக்க வேண்டும் என்ற வாதத்தை நிராகரித்தார். முன்னதாக ஆளுநரின் துணைச்செயலாளர் செங்கோட்டையன் அளித்த புகாரில் நக்கீரன் கோபால் இன்று கைது செய்யப்பட்டார்.

நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக தேச துரோக வழக்கில் கைதான நக்கீரன் கோபால் மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் நக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

You'r reading நக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிலை பதுக்கல்-ரன்வீர்ஷாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்