அண்ணா குடும்ப நிலத்தை அபகரிக்க முயற்சி என புகார்!

political leader Anna family land trying grab complaint

காஞ்சிபுரத்தில் அண்ணா குடும்பத்தின் அனுபவத்தில் உள்ள அரசு குத்தகை நிலத்தை அபகரிக்க முயற்சி நடப்பதாக புகார் கிளம்பியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளத்திர்க்கு கடந்த 1995ஆம் வருடம் தமிழக அரசால் 7 ஏக்கர் நிலம் 20 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டது. அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம் மறைவிற்குப் பிறகு அவரது குடும்பத்தினர் அரசு குத்தகை நிலத்தை பராமரித்து வந்த நிலையில் குத்தகை காலம் முடிவடைந்தது.

இதனை அறிந்த சிலர், நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக தெரிகிறது. அதனை தடுத்து நிறுத்தி அந்த நிலத்தின் குத்தகையை மீண்டும் பரிமளம் குடும்பத்தின் வாரிசுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் குழு மனு அளித்தது.

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் பொன்னையா, புகார் குறித்து விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

You'r reading அண்ணா குடும்ப நிலத்தை அபகரிக்க முயற்சி என புகார்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வைரமுத்து நீங்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்