அவதூறு வழக்கு- ஸ்டாலின் ஆஜராக விலக்கு

Defamation case - exempt Stalin appearance

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளில், நேரில் ஆஜராவதில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விலக்க அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும், தற்போதைய அதிமுக அரசு சார்பாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் மீது 7 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களின் குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் விசாரிக்கப்படுகிறது.

இன்றைய தினம், திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தமிழ அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக முதன்முதலாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானர். ஏற்கனவே, இந்த வழக்குகளில், உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் பெற்றுள்ள தடையை ஏற்று, அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.

பின்னர் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதேபோன்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

You'r reading அவதூறு வழக்கு- ஸ்டாலின் ஆஜராக விலக்கு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சபரிமலை போரட்டதிற்கு ஒரு சாமனிய பெண்ணின் கேள்வி?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்