திமுகவின் ரிங்மாஸ்டர் அமித்ஷா- தம்பிதுரை காட்டம்

DMK Ringmaster Amit Shah - Thambidurai

திமுகவின் ரிங்மாஸ்டராக பாஜக தேசிய செயலாளர் அமித்ஷா செயல்படுவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிரை கடுமையாக விமர்சித்துள்ளார்.


கரூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகிறார். கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குள்ளம்பட்டி, காக்காவாடி, கீழ்பசுபதிபாளையம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களை சந்தித்து, மனுக்களை பெற்றார்.

பின்னர் பேசிய அவர் சிபிஐ என்றால் மத்திய பாஜக என்றாகிவிட்டது. சிபிஐ பாஜக திமுகவிற்கு சாதகமாக செயல்படுகிறது. சிபிஐயை கையில் வைத்துக்கொண்டு மத்திய அரசு அதிமுகவை மிரட்டுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என சிபிஐ மூலம் அதிமுகவுக்கு அழுத்தம் தரப்படுகிறது"

"அதிமுக அரசுக்கு மோடி ரிங் மாஸ்டர் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆனால், திமுகவிற்கு அமித்ஷா ரிங் மாஸ்டராக உள்ளார். மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசின் கையில் உள்ளது." என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

You'r reading திமுகவின் ரிங்மாஸ்டர் அமித்ஷா- தம்பிதுரை காட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராஜஸ்தானில் காணமல் போன 32 மலைகள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்