மிசோராம் மாநில சபாநாயகர் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார்

Mizoram State Speaker joined Bharatiya Janata

மிசோராம் மாநில சட்டப்பேரவை தலைவரும் ஏழு முறை சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவருமான ஹிப்ஹேய் பதவியிலிருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

மிசோராம் சட்டப்பேரவை தலைவராக இருந்தவர் ஹிப்ஹேய் (வயது 81). 1972 முதல் 1989 வரை ஆறு முறை துய்பங் என்ற தொகுதியிலிருந்து அவர் மிசோராம் சட்டப்பேரவைக்குத் தேர்வாகியிருந்தார். 2013ம் ஆண்டு தேர்தலில் பாலாக் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார்.

வரும் நவம்பர் 28ம் தேதி மிசோராமில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஹிப்ஹேயின் பெயரை காங்கிரஸ் முதலில் பாலாக் தொகுதிக்கு அறிவித்திருந்தது. அவர் கட்சி மாறக்கூடிய வாய்ப்பு இருந்த நிலையில் கடந்த வாரம் காங்கிரஸ் பொது செயலாளர் கே.டி.ரோஹ்கா, பாலாக்கில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவை துணை தலைவர் லால்ரினாவ்மாவிடம் தமது பதவி விலகல் கடிதத்தை கொடுத்த ஹிப்ஹேய், பின்னர் காங்கிரஸ் அலுவலகத்திற்குச் சென்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிற கடிதத்தை அளித்தார்.

40 இடங்கள் கொண்ட மிசோராம் சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து ஐந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்

You'r reading மிசோராம் மாநில சபாநாயகர் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தரணியெங்கும் விவசாயம் செழிக்கட்டும்:'சர்கார் தீபாவளிக்கு' ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்