டேட்ஸ் - நட்ஸ் காம்போ குல்பி ஐஸ்கிரீம்

Yummy Dates and nuts kulfi recipe

வெயிலுக்கு இதமான பேரிச்சைப் பழம், நட்ஸ் நிறைந்த சூப்பர் குல்பி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பேரிச்சைப்பழம் - 5

பால் - 2 கப்

அரைத்த பேரீச்சை விழுது

சர்க்கரை - ஒரு டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

பொடியாக உடைத்த நட்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்

சோள மாவு - சிறிதளவு

செய்முறை:

முதலில், பேரீச்சை பழத்தை விதைகளை நீக்கி ஒரு மணி நேரம் பாலில் ஊறவைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு, அடிப்பிடிக்காத பாத்திரம் ஒன்றில் 2 கப் பாலை ஊற்றி சுண்டக் காய்ச்சவும். அத்துடன், பேரீச்சை விழுது, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும்.

பின்னர், பொடித்த பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ்களை சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்நிலையில், ஒரு டீஸ்பூன் சோள மாவை சிறிதளவு பாலில் கரைத்து அதனுடன் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.பால் கெட்டியாக மாறி திரண்டு வரும்போது இறக்கி ஆறவிடவும்.

இறுதியாக, குல்பி மோல்டில் ஊற்றி சுமார் 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து பிறகு பரிமாறவும்.

அடடே.. சுவையான டேட்ஸ் - நட்ஸ் குல்பி ஐஸ்கிரீம் ரெடி..!

You'r reading டேட்ஸ் - நட்ஸ் காம்போ குல்பி ஐஸ்கிரீம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டேல் ஸ்டெயின் ரிட்டனர்ஸ் - வெற்றி பெறுமா பெங்களூரு அணி?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்