ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் நண்டு லாலிபாப் ரெசிபி

Crispy Crab Lollipop Recipe

வீட்டிலேயே சுவையான நண்டு லாலிபாப் எப்படி செய்வதென்று இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

நண்டு - 6

முட்டை - 1

பச்சரிசி மாவு - 2 டீஸ்பூன்

மைதா மாவு

பிரெட் க்ரம்ப்ஸ்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லித்தழை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் கடாயில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நண்டுகளை போட்டு வேகவிடவும்.
நண்டு நன்றாக வெந்ததும், ஆறவைத்து ஓடுகளை உடைத்து சதைகளை மட்டும் தனியாக எடுத்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

அதனுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, மைதா மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும்.
பிறகு, இதில் இருந்து கொஞ்சமாக எடுத்து லாலிபாப் வடிவில் செய்து அதில் குச்சியோ அல்லது நண்டின் கால்களையோ செருகலாம்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
இடையே, ஒரு கிண்ணத்தில் முட்டையை அடித்து வைக்கவும். மற்றொரு கிண்ணத்தில் பிரெட் க்ரம்ஸ் தயாராக வைக்கவும்.

எண்ணெய் சூடானதும், ஒவ்வொரு லாலிபாப்பையும் எடுத்து முதலில் முட்டையில் முக்கி, பிறகு பிரெட் க்ரம்ப்ஸில் பிரட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான நண்டு லாலிபாப் ரெடி..!

குழந்தைகளுக்கு பிடித்த சப்பாத்தி நூடுல்ஸ் ரெசிபி

You'r reading ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் நண்டு லாலிபாப் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்