சுடச்சுட வெங்காய போண்டா ரெசிபி

Hot Serve Onion Bonda recipe

மக்களே.. மாலை நேர உணவாக சுடச்சுட வெங்காய போண்டா ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - ஒரு கப்

அரிசி மாவு - கால் கப்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - ஒரு துண்டு

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை

கறிவேப்பிலை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், பேக்கிங் சோடா, உப்பு, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதில்விட்டு பொரிக்கவும்.

மாவு வெந்து பொன்னிறமானதும் எடுத்து சுடச்சுட பரிமாறவும்.

அவ்ளோதாங்க.. சுவையான வெங்காய போண்டா ரெடி..!

ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் நண்டு லாலிபாப் ரெசிபி

You'r reading சுடச்சுட வெங்காய போண்டா ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எல்ஜி டபிள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்: ஜூன் 26ம் தேதி அறிமுகம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்