கமகமக்கும் தாளிப்பு வடகம் செய்யலாமா ?

Tasty Vadagam Recipe

வீட்டிலேயே இயற்கையாகவே தாளிப்பு வடகம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1 கிலோ

பூண்டு - கால் கிலோ

சீரகம் - 100 கிராம்

கடுகு - 100 கிராம்

சோம்பு - 100 கிராம்

கொண்டக்கடலை - 100 கிராம்

துவரம் பருப்பு - 100 கிராம்

மிளகு - 75 கிராம்

மஞ்சள் தூள் - 25 கிராம்

பெருங்காயத்தூள் - 10 கிராம்

நல்ண்ணெய் - 100 மி.லி.,

கறிவேப்பிலை

உப்பு

செய்முறை:

முதலில் பூண்டுகளை தோல் உரித்து நசுக்கிக் கொள்ளவும்.

பின்னர் வெங்காயத்தை ஒவ்வொன்றாக எடுத்து பொடியாக நறுக்கி பூண்டுடன் சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு, உப்பு, கறிவேப்பிலை, சீரகம், கடுகு, வெந்தயம், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

இந்த கலவையை பெரிய தட்டில் பரப்பி வெயிலில் காய வைக்கவும்.

இதை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து வெளியில் காய வைத்து எடுக்கவும்.

ஒவ்வொரு முறை எடுக்கும்போதும் நல்லெண்ணெய் தொட்டு உருண்டைப் பிடித்துக் வைத்து, மீண்டும் காய வைக்கும்போது உடைத்து காய வைக்கவும்.

கலவை நன்றாக காய்ந்ததும், இறுதியாக நல்லெண்ணெய்விட்டு உருண்டை பிடித்து வைத்து சமையலுக்கு பயன்படுத்தலாம்.

கமகமக்கும் தாளிப்பு வடகம் ரெடி..!

You'r reading கமகமக்கும் தாளிப்பு வடகம் செய்யலாமா ? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரகசியமா வெச்சிக்கோங்க.. சுவையை அள்ளிக்கொடுக்கும் பிரியாணி மசாலா ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்