மொறு மொறு வெண்ணெய் முறுக்கு ரெசிபி

Crispy Butter Murukku Recipe

சூப்பர் ஸ்னாக் மொறு மொறு வெண்ணெய் முறுக்கு எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்

கடலை மாவு - அரை கப்

சீரகம் - அரை டேபிள் ஸ்பூன்

வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, சீரகம், வெண்ணெய், உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்துக் கொள்ளவும்.

பிறகு, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு தயாராக வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.

மாவை ஸ்டார் வடிவில் உள்ள முறுக்கு அச்சியில் போடவும்.

எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு பிழிந்து பொரிக்கவும்.

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு வேகவிடவும்.

முறுக்கின் வண்ணம் மாறியதும் எடுத்து ஆறவிட்டு பரிமாறவும்.

சுவையான மொறு மொறு வெண்ணெய் முறுக்கு ரெடி..!

ஈசியா செய்யலாம் வெண்ணிலா கப் கேக் ரெசிபி

You'r reading மொறு மொறு வெண்ணெய் முறுக்கு ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சத்து நிறைந்த முருங்கைக்கீரை குழம்பு ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்