இதயத்திற்கு ஏற்ற வத்தல் குழம்பு செய்வது எப்படி?

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்திற்கு நன்மை பயக்கும் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது. அந்த வெங்காயத்தை வைத்து குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

 

செய்முறை:

  1. வெங்காயத்தை மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும்.
  2. புளியை நீரில் ஊற வைத்து, கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காய வடகத்தை போட்டு பொரித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  4. பொரித்த வடகத்தை மிக்சியில் பொடித்து வைத்து கொள்ளவும். பின் அதே எண்ணெயில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, சேர்த்து தாளித்து அதனுடன் அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும், அதில் அனைத்து தூள்களையும் சேர்த்து, சிறிது நேரம் வதக்க வேண்டும்.
  6. பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளி நீரை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு அதனுடன் மிக்சியில் பொடித்து வைத்து வடகத்தை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கெட்டியானவுடன் வெல்லம் போட்டு இறக்க வேண்டும்.இந்த குழம்பு மிகவும் சுவைாயகவும் வாசனையாகவும் இருக்கும்.

You'r reading இதயத்திற்கு ஏற்ற வத்தல் குழம்பு செய்வது எப்படி? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி இடஒதுக்கீடு இல்லை- உச்சநீதிமன்றம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்