தீபாவளி என்றாலே முதலில் செய்யும் பலகாரம் முறுக்கு!

Diwali Snacks Recipe in tamil

தீபாவளி வருவதற்கு சில தினங்கள் தான் உள்ளது அதற்குள் தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி என்று பார்ப்போம். தீபாவளி என்றாலே முதலில் செய்யும் பலகாரம் முறுக்கு அதை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

செய்முறை:

  1. உளுந்தம் பருப்பை வெறும் வாணலியில் போட்டு சூடாகும்வரை வறுக்கவும். வறுத்த உளுந்தம் பருப்பைஆற வைக்கவும். பின் மிசினில் கொடுத்து அரிசியையும், உளுந்தம் பருப்பையும் தனித்தனியே அரைக்கவும்.
  2. அரிசி மாவு மற்றும் உளுந்தம் மாவையும் தனித்தனியே சலித்துக் கொள்ளவும். பின் வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்தம் மாவு மற்றும் சீரகம் அல்லது எள் ஆகியவற்றை போட்டு ஒரு சேரக் கலக்கவும்.
  3. தேவையான அளவு தண்ணீரில் தேவையான அளவு உப்பைப் போட்டு கரைக்கவும். பின் உப்புத் தண்ணீரைச் சிறிது சிறிதாக மாவுக் கலவையில் சேர்த்து சப்பாத்தி மாவை சரியான பதத்தில் பிசையவும்.
  4. பிசைந்த மாவில் இருந்து சிறிதளவு எடுத்து முறுக்கு உழக்கில் அடைக்கவும். அடுப்பில் வாயகன்ற அடிப்புறத்தில் தட்டையாக உள்ள வாணலியை வைக்கவும். பின் அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் முறுக்குகளை பிழிந்து விடவும். ஒரு புறம் வெந்ததும் முறுக்குகளை மறுபுறம் திருப்பி விடவும். முறுக்குகளில் எண்ணெய் குமிழி அடங்கியதும் எடுத்து விடவும் சுவையான முறுக்கு தயார்.

You'r reading தீபாவளி என்றாலே முதலில் செய்யும் பலகாரம் முறுக்கு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கட்டண உயர்வு கண்டித்து நெல்லை பல்கலை மாணவர்கள் போராட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்