கமலின் இன்றைய தேர்தல் பிரச்சாரம் திடீர் ரத்து

mnm leader kamal cancels todays election campaign

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் இன்றைய தேர்தல் பிரச்சாரத்தை திடீர் என ரத்து செய்துள்ளார்.கோவையில் பாலியல் கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறச் செல்வதால் கமலின் இன்றைய பிரச்சாரப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்துள்ள கமல் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் பிரச்சாரத்தையும் தொடங்கினார். தென் சென்னை தொகுதியில் ரீ ஹைடெக் பாணியில் பிரச்சாரத்தை தொடங்கினார் கமல். கையில் டார்ச் லைட்டுடன் சொல்வதை செய்வோம் என்று கூறி, அந்தந்தப் பகுதி மக்களிடமும் அடிப்படை பிரச்னைகளைக் கேட்டு கமல் பிரச்சாரம் செய்தது முதல் நாளிலேயே பெரும் வரவேற்பை பெற்றது.

இன்று மத்திய சென்னை மற்றும் வடசென்னையில் 2-வது நாளாக கமல் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென இன்றைய பிரச்சாரத்தை கமல் ரத்து செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட கோவை சிறுமியின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவிக்க கமல் செல்வதால் இன்றைய பிரச்சாரப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading கமலின் இன்றைய தேர்தல் பிரச்சாரம் திடீர் ரத்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'சுயேச்சைகள் தான்...ஆனால் தன்மானம் உள்ளவர்கள்’ –டிடிவி தினகரன் விளாசல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்