ஆமாம்...பாஜக தூதுவிட்டது உண்மை! -டிடிவி தினகரன் திட்டவட்டம்

ttv dinakaran slams bjp

கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்துமாறு பாஜக தூது விட்டதாக டிடிவி தினகரன் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு பெரும் சவாலாக டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலில், பரிசுப் பெட்டி என்ற பொது சின்னத்தில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்காக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார் டிடிவி தினகரன்.

இந்நிலையில், கும்பகோணம் சுவாமிமலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ‘கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளில் மாற்று வேட்பாளரை நிறுத்த எனக்கு பாஜக தூது விட்டது உண்மைதான். இதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெரும் பட்சத்தில், அதிமுக, திமுகவுக்கு ஆதரவு அளிக்க முன்வரமாட்டோம்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

முன்னதாக, பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த டிடிவி தினகரன், நெல்லை, குமரி உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றுமாறு தன்னிடம் பாஜக தூது அனுப்பியதாக கூறினார். டிடிவியின் இந்த குற்றச்சாட்டு பொய் என்றும் ஆதாரமற்ற ஒன்று என பாஜக மறுத்துள்ளது.

 

'பொன்னாருக்கு டிடிவி வைத்த ஆப்பு ; திருப்பியடித்த பாஜக' அம்பலமாகும் திரைமறைவு ரகசியங்கள்

You'r reading ஆமாம்...பாஜக தூதுவிட்டது உண்மை! -டிடிவி தினகரன் திட்டவட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `அந்த மூன்று காதல் தான் படத்தின் மூலதனம்’ - `மெஹந்தி சர்க்கஸ்’ எனும் அழகிய காதல் காவியம் உருவான கதை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்