யூடியூப்பில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை.

ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சலுகை ஒன்றை வழங்கி வருகிறது. ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை அளிக்கப்படுகிறது. தற்போது யூடியூப் மியூசிக் பிரிமியம், யூடியூப் பிரிமியம், யூடியூப் ரெட் அல்லது கூகுள் பிளே மியூசிக் ஆகியவற்றை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு யூடியூப் பிரிமியம் சந்தா மூன்று மாதங்களுக்கு சலுகையாக வழங்கப்படுகிறது.

யூடியூப் பிரிமியத்திற்கு ஒரு மாத சந்தா ரூ.129/- ஆகும். இதில் விளம்பரமில்லாத, ஆஃப்லைனிலும் பயன்படுத்தக்கூடிய வசதி உண்டு. மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் இச்சலுகை 2021 ஏப்ரல் 22ம் தேதி வரைக்கும் இந்தியாவில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சலுகை பெற்ற வாடிக்கையாளர்களுக்கு பரீட்சார்த்த காலம் முடிந்த பிறகு யூடியூப் பிரிமியத்திற்கான சந்தா வசூலிக்கப்படும். ஆனால் வாடிக்கையாளர்கள் எந்த நேரமும் இதிலிருந்து வெளியேறலாம் என்று கூறப்படுகிறது.

You'r reading யூடியூப்பில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்த உணவுகளை சாப்பிட்டால் குறட்டை வரும்... எவை தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்