ட்விட்டரின் ஃபிளீட்ஸ் அம்சத்தில் குறைபாடு புகார்

சமூகவலைதளமான ட்விட்டர் 'ஃப்ளீட்ஸ்' என்று ஓர் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. ஃப்ளீட்ஸ் வகை பதிவுகள் ஒரு நாள் கடந்ததும் (24 மணி நேரம்) தாமாகவே மறைந்துவிடும். அதன்பிறகு அவற்றை வாசிக்க இயலாது. பிரேசில், இத்தாலி, இந்தியா மற்றும் தென் கொரியா நாடுகளில் இது சோதனை முயற்சி செய்யப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் அனைத்து பயனர்களின் பயன்பாட்டுக்கும் அளிக்கப்பட்டது.

ப்ளீட்ஸ் பதிவுகளில் குறைபாடு (பக்) இருப்பதை பயனர் ஒருவர் சனிக்கிழமை சுட்டிக்காட்டியுள்ளார். 24 மணி நேரம் கடந்த பிறகு, பயனரின் ப்ளீட்ஸ் பதிவுகள் காணக்கிடைப்பதாகவும் அதை மற்றவர்கள் வாசிப்பது பதிவிட்டவருக்கு தெரியாது என்றும் புகார் எழுந்தது. இந்தக் குறைபாடு (பக்) பற்றி தங்களுக்குத் தெரிய வந்துள்ளதாகவும் அதை சரி செய்யும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாகவும் ட்விட்டர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading ட்விட்டரின் ஃபிளீட்ஸ் அம்சத்தில் குறைபாடு புகார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தென்காசி அரசு விழாவை புறக்கணித்த பத்திரிகையாளர்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்